search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிராம மக்கள் முற்றுகை"

    • சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது தங்கள் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும் என கோசமிட்டனர்
    • ஆத்தூர் ஊராட்சியில் நடைபெறும் 100 நாள் வேலையில் வார்டு உறுப்பினர்கள் தலையீடு அதிகமாக உள்ளது. இதனால் 100 நாள் வேலையில் முறைகேடுகள் நடைபெற்று வருகிறது.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே ஆத்தூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டமான 100 நாள் வேலைகள் நடைபெற்று வருகிறது. இதில் குறிப்பாக சில பகுதி மக்களுக்கு மட்டும் தொடர்ந்து வேலை வழங்கி வருவதாக புகார் கூறப்படுகிறது. இதனால் வேலை வழங்கப்படாத 1, 2, 3 வார்டு பகுதிகளைச் சேர்ந்த ஆத்தூர் மேற்கு தெரு, வடக்குத்தெரு, வெள்ளாளர் தெரு, நாயுடு தெரு, கள்ளர் தெரு, ஆலம்பட்டி, அக்ரஹாரம் தெரு, மாலம்பட்டி, பத்திர ஆபிஸ் தெரு, மாதா கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    அப்போது தங்கள் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும் என கோசமிட்டனர். தகவல் அறிந்து ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தட்சிணாமூர்த்தி, லாரன்ஸ் மற்றும் ஆத்தூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹேமலதா, முருகன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆத்தூர் ஊராட்சியில் நடைபெறும் 100 நாள் வேலையில் வார்டு உறுப்பினர்கள் தலையீடு அதிகமாக உள்ளது.

    இதனால் 100 நாள் வேலையில் முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. பணிக்கு வராதவர்களுக்கு வேலைக்கு வந்ததாக வருகை பதிவேட்டில் பதிவு செய்யப்படுகிறது. தங்களுக்கு வேண்டப்பட்ட சிலருக்கு மட்டும் தொடர்ந்து வேலை வழங்கப்பட்டு வருகிறது. 100 நாள் வேலை பணிகளில் வார்டு உறுப்பினர்கள் தலையீடு இருக்கக் கூடாது என அதிகாரியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) தட்சிணாமூர்த்தி தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்கப் போவதாக அரசு வெளியிட்ட அறிவி ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
    • சட்ட மன்றத்தில் மட்டுமல்லாது மக்கள் மன்றத்திலும் இதுகுறித்து பேசி நடவடிக்கை எடுப்பேன் என எம்.எல்.ஏ. கூறினார்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே எம்.குரும்பபட்டி, முத்து க்காமன்பட்டி, கருத்தாண்டி பட்டி, சென்னஞ்செட்டி பட்டி உள்பட 50க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நிலக்கோட்டை எம்.எல்.ஏ. அலுவலகத்தை முற்றுகை யிட்டு அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்கப் போவதாக அரசு வெளியிட்ட அறிவி ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

    மேலும் தேன்மொழி சேகர் எம்.எல்.ஏ.விடம் தங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தரவேண்டும் என கோஷமிட்டனர். சட்ட மன்றத்தில் மட்டுமல்லாது மக்கள் மன்றத்திலும் இதுகுறித்து பேசி நடவடிக்கை எடுப்பேன் என்றார். இதனை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். அப்போது நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ரெஜினாநாயகம், ஊராட்சி ஒன்றியக்குழு துணை தலைவர் யாகப்பன், ஆதிதமிழர் மக்கள் கட்சி தலைவர் ராமன் மற்றும் கவுன்சிலர்கள் அங்கி ருந்தனர்.

    இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • மின்வாரிய ஊழியர்களும் வந்து மின் கம்பத்தை பிடுங்கி எடுத்து சென்றனர்.
    • மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பத்தை பிடுங்கியவுடன் கிராமமக்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    கொடுமுடி:

    கொடுமுடி அருகே உள்ள இச்சிப்பாளையத்தில் தனியார் தேங்காய் நார்மில் தொழிற்சாலை சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.20 கோடி ஆகும்.

    இந்த தொழிற்சாலை செயல்பட்டு இதில் இருந்து வரும் கழிவுநீரால் சுற்றுச்சூழல், நிலத்தடி நீர், விவசாய நிலங்கள் பாதிப்பு ஏற்படும் என எதிர்ப்பு தெரிவித்து இந்த பகுதியை சேர்ந்த கிராமமக்கள் பல கட்டமாக போராட்டம் நடத்தினர்.

    அதைதொடர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந் தேதி கிராமசபை கூட்டம் கூட்டி இந்த நார்மில் தொழிற்சாலைக்கு அனுமதி தரக்கூடாது என தீர்மானம் போட்டு கம்பெனி செயல்படுவதை தடுத்து நிறுத்தி வைத்து இருந்தனர்.

    இதற்கு இடையே நார்மில் தொழிற்சாலையில் புதிய மின் கம்பத்தை மின்வாரிய ஊழியர்கள் நட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த இச்சிப்பாளையம் கிராம மக்கள் தேங்காய் நார்மில் தொழிற்சாலையை முற்றுகையிட்டு மின் கம்பம் நட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பொதுமக்கள் தரப்பில் புதியதாக நடப்பட்ட மின் கம்பத்தை அகற்ற வேண்டும். இல்லையேல் சாலை மறியலில் ஈடுபடுவோம் என்றனர்.

    இதையடுத்து மின்வாரிய அதிகாரிகளிடம் பேசி பிரச்சனைக்குரிய இடத்தில் மின் கம்பம் நட்டது தவறு. உடனடியாக அகற்றிட வேண்டும் என போலீசார் தெரிவித்தனர்.

    இதனையடுத்து மின்வாரிய ஊழியர்களும் வந்து மின் கம்பத்தை பிடுங்கி எடுத்து சென்றனர். நார்மில் முன்பு கூடியிருந்த கிராமமக்களிடம் போலீசார் பேசி அனைவரையும் கலைந்து போக செய்தார்கள். மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பத்தை பிடுங்கியவுடன் கிராமமக்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதனால் சிறிது நேரம் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    • திட்டக்குடி அருகே பஞ்சாயத்து அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
    • திட்டக்குடி அருகே கொடிக்களம் ஊராட்சியில் பழைய கொடிக்களத்தைச் சேர்ந்த அருந்ததியர் சமூக மக்களுக்காக தனி மயானம் உள்ளது. இதில் தனிநபர் ஒருவர் பன்றி வளர்க்கும் கொட்டகை அமைத்துள்ளார்.

    கடலூர்:  திட்டக்குடி அருகே கொடிக்களம் ஊராட்சியில் பழைய கொடிக்களத்தைச் சேர்ந்த அருந்ததியர் சமூக மக்களுக்காக தனி மயானம் உள்ளது. இதில் தனிநபர் ஒருவர் பன்றி வளர்க்கும் கொட்டகை அமைத்துள்ளார்.  இதுகுறித்து பொது மக்கள் புகார் தெரிவித்தும் ஊராட்சி மன்ற தலைவர் எவ்வித நடவடிக்கை எடுக்க வில்லை. ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் கடந்த 7-ந் தேதி ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி போராட்ட–த்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர் மாயவேல் 8-ந் தேதியே ஆக்கிரமிப்பை அகற்ற படும் என உறுதியளித்தார். ஆனால் நேற்று வரை ஆக்கிரமிப்பு அகற்றப்பட வில்லை. இதனால் அப்பகுதி மக்கள் நேற்று மதியம் கொடிக்களம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட னர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஆவினங்குடி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் வரும் 12 ம் தேதி இன்று மாலை 6 மணிக்குள் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என எழுத்துப்பூர்வமாக ஊராட்சி மன்ற தலைவர் உறுதி அளித்தார். இதை யேற்று போராட்டக் காரர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்ற னர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×